ஏதோ எழுதனும் னு தோனிச்சு அதான் சரி நம்ம லைப் ல விட்டு வச்சது இது ஒன்னு தான் ,இதையும் கெடுத்துறலாம் னு முடிவு பண்னி வந்துருக்கேன்.ஆனா ஒன்னுங்க வாசிக்கிறவங்க தயவு செய்து என்ன சார்ந்தவங்கல திட்டாம என்ன மட்டும் திட்டுங்க,ஏன்னா இதுக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல அதான்..
என்னடா தலைப்ப கேனத்தனமா போட்டுருக்கானே னு யோசிக்காதீங்க..நானே கிட்ட தட்ட அப்படித்தான்...சரி மேட்டருக்கு வருவோம்..இந்த தலைப்பு ஏன் தெரியுமா..?
ஸ்கூல் காலத்துல நானும் கூட காதலிச்சேன்(அப்ப பாருங்களேன்).நான் மட்டுமில்ல என் கூட ஒரு காவாலி கூட்டம் சுத்தும்...அதுக்கு பெயர் FRIENDS ஆம்..நான் சொல்லலீங்கோ....வெளிய எல்லாரும் அப்படி தான் நம்பிட்டு இருந்தாய்ங்க......இப்படி அந்த கூட்டதுல எல்லாரும் லவ் பன்னிட்டு இருந்தோம்...பண்ணுனமோ இல்லயோ அப்படி சொல்லிட்டு திரிஞ்ஞோம்..அதுல ஒரு மூணு பேர்....அருண்,ரம்சான்,கோகுலன்...கவிதை எழுதுவானுங்க.அதுலயும் இந்த அருண் இருக்கானே கவிதை எழுதியே பொண்ணுங்கல கவுத்துருவான்.சரி ஏன்டா நம்மளும் ட்ரை பன்ன கூடாது னு யோசிச்சேன்.
மூணு நாளா முக்கி பார்த்தேன்...கவிதைய தவிர மத்தது எல்லாம் வந்திச்சு...அதெல்லாம் என்னனு சொல்ல விரும்பல..ஏன்னா அது பர்சனல்..:P
ஒரு நாள் நாங்க எல்லாரும் படிச்சிட்டு இருந்தோம் (நீங்க நம்பித்தான் ஆகனும்)..அப்ப ஒரு கவிதை புத்தகத்த பத்தி என் நண்பன் அருண் சொல்லிட்டு இருந்தான்...நமக்கு தான் அந்த DEPARTMENT WEAK ஆச்சே....ஸீரியஸா கேக்குர மாதிரி நடிச்சிட்டு இருந்தேன்...அப்பனு பார்த்து ஒரு பாவி பய......" மச்சான் உனக்கு புடிச்ச ஒரு கவிதை சொல்லுடா மச்சான்" னு சொன்னான் பாருங்க...அவங்க குடும்பமே ஞாபகம் வந்திச்சு...ஆனாலும் என்ன செய்ய...சமாளிக்கனுமே...
"சங்கீதா" மச்சான் னு ஒரு போடு போட்டுட்டேன்...பசங்க அழாத குறையா என்ன பாத்தானுங்க...அன்னை ல இருந்து இன்னைக்கு வரைக்கும் இப்படி தான் ....கவிதை னு ஏதாவது சொல்லி இவய்ங்க உசுர வாங்குறதே எனக்கு ஒரு பொழப்பு...ஆமா இந்த சங்கீதா யாரு னு சொல்லவே இல்லயே...இதெல்லாம் சொல்லி தான் தெரியனுமா...அவ என் ஏஞ்ஞல்...அதான் தேவதை ங்க (அய்யோ வாங்குறானே....!) இப்படி சொன்னா கூட அடிக்கடி நம்ம பசங்க கடுப்பாகிருவானுங்க..உங்கள மாதிரியே...:D
அந்த நிலாவுக்காக கிறுக்குனது தான் கீழ உள்ளது எல்லாம்...அதென்னடா நிலா னு TENTION ஆகாதீங்க....லவ் பன்றது எல்லாம் இப்படி தான் சொல்லிட்டு திரியும்...நானும் ஒரு TYPICAL காதலன்...அய்யய்யோ...ஸாரிங்க மிஸ் ஆகிருச்சு நான் காதலிச்சவன் மட்டும் தான்...ஏன்னா அவ எப்பவுமே எனக்கு கைக்கெட்டாத ஒரு நிலா தான்...இன்னைக்கு வரைக்கும். ரொம்ப அலட்டிட்டேன் னு நினைக்கிறேன்...நினைக்குறது என்ன..அப்படி தான்
ஹைக்கூ ங்ற பாணி ல.....நான்....ஸாரி....நானும் எழுதுன சில "அவள்"
இப்ப என்ன தான் டா சொல்ல வாற னு கேக்காதீங்க
அதாங்க கவிதை கவிதை.....அபிராமி...அபிராமி
(அய்யய்யோ FIGURE மாறிருச்சே....:P)
-அறியாமை-
காலையும் மாலையும்
முள்ளாய் காத்து நின்றேன்
ரோஜாவே நீ பறிப்பவனுக்கு
சொந்தம் என்பதை அறியாமல்
இத பத்தி சொல்லியே ஆகனும்...இது தாங்க நான் முதல் முதல் ல அவளுக்காக எழுதுனது....
"சூப்பரா இருக்கு மச்சி ...."(நம்மளே சொல்லிகிட்டா தான்)
-உன் பெயர்-
இசைக்கு மறு பெயரே
இன்பத்தின் கருவறையே
உன்னைப் பார்த்த முதல் முறையே
என்னுள் காதல் பூத்தது நான் அறியாமலே
எனக்கு இசை னா ரொம்ப இஷ்டம்ங்க...அதுனாலயோ என்னமோ தெரியல...இவள மட்டும் லவ் பன்னேன்..(நம்புற மதிரி இல்ல என்னா)
-இணையாத தண்டவாளங்கள்-
என் காதலின்
உறவுப் பாலமாம்
நீ
சொல்லி கொடுத்த உலக பாடம்
என் காதலும் உன்னைப் போல ஒட்டாது
ஆமாங்க அவ வேற ஊரு...படிக்குறதுக்காக ல நம்ம ஊருக்கு வந்தா...அப்ப தான் அவளுக்கே ஒரு விஷயம் தெரியும்....அவளுக்கு ஏழரை சனி னு
அதாங்க நான் என்ன சொன்னேன்
-உண்மையான காதல்-
ஒருத்தியை
பார்க்க
துடிப்பது காதல் அல்ல
எவள்
ஒருத்தியை மறக்க
தவிக்கிறாயோ
அது தான்
காதல்
இது என்னாத்துக்கு னா...பசங்க என்ன தான் ஸீரியசா லவ் பண்னாலும்..ஒரு அழகான பொண்ணு ரோட்டுல போனா போதும் உஸாராகிருவானுங்க...நானும் அப்படி தான்
அப்ப எவனாவது கேப்பான் பாருங்க "என்ன மச்சான் ஸீரியசா லவ் பன்றேனு சொல்லிட்டு இப்படி ஸைட் அடிக்கிறனு"...அவனுக்காக நான் தயாரிச்சு வச்சது தான் இது
எப்படி எல்லாம் ஏமாத்த வேண்டி இருக்கு....!
-அலைச்சல்-
கடவுளே
அவளை பெண்ணாக
படைத்து
என்னைப் பேயாக
அவள் பின்னால்
அலையவிடுகிறாயே
நியாயமா...?
இது தாங்க என் வாழ்க்கைய மாத்திரிச்சு....குறிப்பா இன்னைக்கு என் உயிரான என் நண்பர்கள பிரிஞ்சு வெளிநாடு வந்து அவஸ்தை படுறேன் னா அதுக்கு இது தான் காரணம்
இப்படி அலைஞ்சா எப்படி படிக்க முடியும்....:'(
பாவம் ங்க அவள கூட படிக்க விடாம பண்ணிட்டேன்....
மகா கவி ங்குற நினைப்புல மகா பாவி ஆகிட்டேன்
என்ன மண்ணிச்சிருங்க
இன்னைக்கு உசுர எடுத்தது போதும்...இன்னொரு நாள் மீட் பண்ணலாம்...கஷ்ட படணும் னு தோனிச்சு னா இங்க வாங்க.......இருக்கவே இருக்கேன்...முக்கியமான விஷயம்
எனக்கு வேறு கிளைகள் கிடையாது....:D
ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன்...ஏதாவது கொஞ்ஞம்
பார்த்து போட்டுட்டு(வாக்குகள்...கருத்துக்கள் னு) போங்க நண்பர்களே
பி.கு: எனது பதிவில் உள்ள பிழைகளை தயவு செய்து மண்ணிக்கவும்
//பாவம் ங்க அவள கூட படிக்க விடாம பண்ணிட்டேன்....
பதிலளிநீக்குமகா கவி ங்குற நினைப்புல மகா பாவி ஆகிட்டேன்//
super :D :D
ரொம்ப நன்றி நண்பா....ரொம்ப நாளா மனசு ல வச்சு இருந்தத
நீக்குசொல்லிட்ட பாத்தியா....I Like this