என்னடா இவன் தொல்ல தாங்க முடியலயே னு யோசிக்கிறீங்கலா..என்ன தான் செய்ய ங்க.....என் வாழ்க்கை இப்படி மாறிருச்சு....நிம்மதியா தூக்கம் கூட வரமாட்டேங்குது....இன்னும் ரெண்டு நாள் ல முக்கியமான EXAM சரி கொஞ்ச நேரம் தூங்கிட்டு எழும்பலாம் னு போய் படுத்தேன்...உண்மய சொல்லனும் னா படுக்க ட்ரை பண்ணேன்....எனக்கு ஒரு நல்ல பழக்கம் ங்க தூங்க மட்டும் தொடங்கிட்டா என்ன தான் சத்தமா ALARM அடிச்சாலும் எழும்பவே மாட்டேன்...நான் மட்டுமில்ல உலகத்துல பல பேருக்கு இந்த நல்ல பழக்கம் இருக்கு....எப்படியாவது எழும்பி படிக்கனும் னு முடிவு பண்ணி என் பக்கத்து ROOM MATE கிட்ட "மச்சான் சரியா ஒரு 11.30(இரவு)போல எழுப்பி விடு டா" னு சொல்லிட்டு...அப்படியே மல்லாக்கா படுத்து விட்டத்த பார்த்தேன்....கொஞ்ச நேரத்துல அப்படியே தூங்கிட்டேன்
அதான் தூங்கிட்டியே பிறகு என்னத்துக்கு டா இங்க வந்த னு கேப்பீங்க....தூங்குவோம் னு தான் போனேங்க.....ஆன இந்த மனசு னு ஒன்னு இருக்கு பாருங்க..அது டாச்சர் தான் தாங்க முடியல....ஒரு விஷயம் மட்டும் சொல்றேன்,நல்லா கேட்டுகோங்க....மனசு மட்டும் நிம்மதியா இல்ல னா அரண்மனைல படுத்தா கூட தூக்கம் வராதுங்க.அலட்டாம வந்த விஷயத்த சொல்லு டா னு நினைக்காதீங்க...அத தான் சொல்ல போறேன்.
ஆமா அதென்ன வாழ்க்கை ல கடைசி மாதம்...அப்படினா நீ என்ன செத்த பிணமா னு கேக்குறீங்கலா...ஆமாங்க அது தான் உண்மை.... நான் செத்து ஒரு வருஷத்துக்கு மேல
தண்ணி எல்லாம் போட்டுட்டு கதைக்கலங்க...நல்ல சுய நினைவுல தான் இருக்கேன்...நான் இப்படி சொல்றதுக்கு காரணம் இருக்கு...கொஞ்சம் பொறுமையா கேளுங்க....
அம்மா அப்படிங்குற சொந்தம் இந்த உலகத்துலயே விலை மதிப்பில்லாதது....இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்...ஒரு அம்மா அப்படி தான் இருப்பாங்க....ஏன்னா அவங்க அம்மா....ஆனா ஒரு அக்கா அப்படி இருப்பாங்களா....ஏன் இல்ல..எத்தன சினிமாவுல பர்த்துருக்கேன் னு சொல்றீங்களா...உண்மை தாங்க...ஒரு அக்கா அம்மா மாதிரி பாசம் காட்டலாம்....ஆனா ஒரு அம்மாவுக்கும் மேல பாசம் காட்டலாமா...?
அது சாத்தியமா.....?
கண்டிப்பா.....
எங்கயாவது கதை கேட்டுருப்பான் னு நினைப்பீங்க....இல்லங்க இது என் வாழ்க்கை.
எனக்கும் அப்படிதாங்க அம்மா,அப்பா,அண்ணா னு எல்லா சொந்தமும் வாழ்க்கை ல இருந்திச்சு.ஆனா எனக்கு சொந்த அக்கா னு யாருமே இல்ல(பிறப்பால)....கடவுளுக்கு என் மேல அப்படி என்ன அக்கறையோ தெரியல...நான் பிறந்து கொஞ்ச நாள் ல என்ன என் அம்மா கையால என் அக்கா கிட்ட குடுத்துட்டாரு....அதெப்படி அக்கா னு யோசிப்பீங்க...சொந்த அக்கா இல்லங்க...என் பெரியம்மா மகள்.அந்த நிமிஷம் தொடங்கி என் வாழ்க்கை ல.....ஸாரிங்க....என் வாழ்க்கையே அக்கா தான்...எனக்கு மட்டுமில்ல என் அக்காவுக்கும் நான் தான் வாழ்க்கை
என் அக்காவுக்கு எப்பவுமே என் ஞாபகம் மட்டும் தான்......ஆசை ஆசையா "தக்லா வண்டி" னு கூப்பிடுவாங்க....அத கேக்குற சந்தோஷம் இருக்கே....அப்பப்பா....!!
இப்படியே அக்காட அரவணைப்பு ல...கவலைனா என்னானு தெரியாம சந்தோஷமா இருந்தேன்.லைப் அது பாட்டுக்கு போய்ட்டு இருந்திச்சு...அக்காவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாங்க.அவர பத்தி கட்டாயம் சொல்லனுங்க....அக்கா என் அம்மா னா அவரு அப்பா மாதிரி.....என்ன கேட்டாலும் வாங்கி குடுப்பாரு....நான் தான் அவங்கட முதல் பிள்ள....ரெண்டு பேருமே என்ன அப்படி தான் பாத்துகிட்டாங்க
இப்படி இருக்கும் போது தான்....அத்தானுக்கு வெளிநாட்டு ல வேலை கிடைச்சது....அவரும் அங்க போய் SETTLE ஆகிட்டு பிறகு அக்காவ வர சொல்லிட்டாரு.
என்ன தான் செய்ய....லைப் எப்பவுமே ஒரே மாதிரி இருக்காது தானே....அன்னைக்கு அக்கா என்ன பிரிஞ்சு போகும் போது மனசால செத்துட்டாங்க....நானும் தான்.....
என்ன செய்ய விதி னு நினைச்சுகிட்டேன்.
அதுக்கு பிறகு ஒவ்வொரு வருஷமும் என்ன பார்க்குறதுக்காக குடும்பத்தோட வருவாங்க...அவங்களுக்கு ரெண்டு பசங்க...ரெண்டு பேருக்கும் நான் னா உசுரு
அந்த ஒரு மாசம் தான் எனக்கு திருவிழா....உலகத்தையே மறந்துருவேன்
எப்ப பார்த்தாலும் ப்ரண்ட்ஸ் கூட சுத்துரது தான் என் பொழப்பு...அந்த ஒரு மாசம் தான் என் ப்ரண்ட்ஸ கூட மறந்துருவேன் னா பாருங்களேன்.சும்மா சொல்ல கூடாதுங்க என் ப்ரண்ட்ஸ் உம் அப்படி தான் என் அக்கா இருக்கும் போது என்ன விட்டு குடுத்துருவானுங்க....அது தான் என் ப்ரண்ட்ஸ்கு மட்டும் இருக்க சிறப்பு....என்ன அந்த அளவுக்கு புரிஞ்சு வச்சிருந்தானுங்க
அக்காவுக்கும் அப்படி தான் என் நண்பர்கள் மேல ரொம்ப நம்பிக்கை...உண்மய சொல்லனும் னா என் நண்பர்கள பத்தி எல்லா பர்ஸனல் விஷயமும் தெரியும்...அதெப்படி???......வேற யாரு அடியேன் தான் போட்டு குடுக்குறது
உதாரணமா...நான் அக்கா வீட்டுல இருக்கும் போது...என்ன அடிக்கடி என் நண்பன் துஷி தேடி வருவான்....என்னடா இவ்வளவு அக்கறை னு யோசிக்காதீங்க...அவன் ல்வ் பண்ண பொண்ணு பக்கத்து வீடு...அதான் அண்ணனுக்கு என் மேல அவ்வளவு அன்பு...:P
நானும் அவனும் கதைச்சிட்டு இருக்கும் போது அக்கா குரல் கேக்கும்..."அடேய் துஷி என்னடா இன்னைக்கும் சைட் அடிக்க வந்துட்டியா"...அப்படி னு சொல்லி "வா வா காதல் துஷ்யந்தா" னு பாட்டு வேற படிப்பாங்க...அதாவது பரவால இந்த பாட்டுக்கு இவரு ரோட்டுல இருந்து குடுக்குற REACTION உம் அதுக்கு அந்த பொண்ணு மாடி ல இருந்து வெட்கபடுறதும் தான் பெரிய கொடுமை
போன வருஷமும் அப்படி தான் அக்கா என்ன பார்க்க வந்திருந்தாங்க...வழமை போலவே துஷி கூட அடிக்கடி வந்து என்ன பார்த்தான்...அப்படி தான் சொல்லிட்டு திரிஞ்சான்
அந்த மாசம் ரெண்டு நாள் நுவரெலியா போவோம் னு ப்ளான் பண்ணி
அக்கா கிட்ட பர்மிஷனும் வாங்கிட்டேன்...அன்னைக்கு இரவு தாங்க என் அக்கா கிட்ட சொல்லிட்டு இருந்தேன்....என் ப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் ஒரு நாள் வீட்டுக்கு வர சொல்லி சாப்பாடு குடுக்கனும் னு....கவலை படாம போய் வா னு சொல்லி அனுப்பி வச்சாங்க
நானும் ரெண்டு நாள் ப்ரண்ட்ஸ் கூட நல்லா ஆட்டம் போட்டுட்டு பஸ் ல வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன்....அக்கா கிட்ட இருந்து PHONE
"டேய் அத்தன எருமை மாடுகளையும் கூட்டிட்டி வீட்டுக்கு வா" னு....வேற யாரு நம்மல தான்
என்ன ஏது னு தெரியாம எல்லாரும் அக்கா வீட்டுக்கு போனோம்
அங்க பார்த்தா மேசை ல சாப்பாடு எல்லம் சமைச்சு வச்சிருந்தாங்க
என்ன னு கேட்டா...... நான் ஆசை பட்டுட்டேனாம்....அதான் இந்த ஏற்பாடாம்
அதுவும் நாங்க எல்லாம் சாப்பிடும் போது என்ன பின்னால வந்து கட்டி புடிச்சு "இவன் தான் என் மூத்த மகன்" னு என் ப்ரண்ட்ஸ் கிட்ட சொன்னாங்க பாருங்க
இதுக்கு மேல அவங்க அன்ப பத்தி சொல்ல வேணுமா.....:'(

நாட்களும் ரொம்ப ஸ்பீடா போனிச்சு.....அக்காவும் வழமை போல...அவங்க புணிதமான கண்னீரால எனக்கு விடை குடுத்துட்டு வெளிநாடு போனாங்க....அவங்கள ல விட போன அந்த நாள் தான் அவங்க மடி ல நான் கடைசியா படுக்க போறேன் னு எனக்கு தெரியலங்க
சந்தோஷமா என் அக்கா(அம்மா) மடில படுத்துட்டே போய் அவங்கள விட்டுட்டு அழுதுட்டே வந்து சேர்ந்தேன்
கொஞ்ச நாள் ல RESULTS உம் வந்துருச்சு...போன பதிவு ல சொன்ன மாதிரி நான் தான் படிக்கவே இல்லயே...பிறகு எங்க நல்ல RESULTS வர
சரி எப்படியாவது என்ன டாக்டர் ஆக்கனும் னு அக்கா ஆசை பட்டாங்க....என் அக்கா ஒரு இசை மேதாவிங்க....கட்டார் ல(அவங்க இருந்த ஊர்) பிரபல்யமான மியூசிக் டீச்சர்
நல்ல சம்பாரிச்சாங்க......
அதுனால என்ன படிக்க வைக்கனும் னு முடிவு பண்ணி அப்பா கிட்ட கதைச்சு எவ்வளவு செலவு வந்தாலும் பரவால...நான் பார்த்து கொள்றேன் னு சொல்லி வெளிநாடு அனுப்பி வச்சாங்க....
இப்படி ஒரு அக்கா யாருக்கு கிடைப்பாங்க....???

அக்கா ஆசை படி நானும் புறப்பட தயாராகுனேன்....முதல் நாள் பெரியம்மா கூட சேர்ந்து அக்காவோட SKYPE ல கதைச்சேன்.அப்ப பெரியம்மா என் தோள் மேல கைய போட்டு எனக்கு ஆசையா முத்தம் குடுத்தாங்க.....
அக்காவுக்கு வந்திச்சு பாருங்க கோவம்....
"அடியேய் என் புள்ள மேல கைய போடாத டி ...என் வயிறு எரியுது...நான் என் புள்ளய பிரிஞ்சு எவ்வளவு கஷ்டபடுறேன்தெரியுமா" னு ஒரு வார்த்தை ...எனக்கும் என் பெரியம்மாவுக்கும் பேச்சு வரல....கண்ணீர் மட்டும் தான் பதிலா இருந்திச்சு....பெரியம்மாவுக்கு இருந்த ஒரே மகள்,ஒரே ப்ரண்ட் ரெண்டுமே என் அக்கா தான்

நானும் ஒரு வழியா வெளிநாடு வந்து சேர்ந்தேன்.ஒவ்வொரு நாளும் அக்கா PHONE பண்ணுவாங்க...அது தான் எனக்கு ஆறுதலா இருந்திச்சு....ஒரு நாள் காலை ல அப்பா கிட்ட இருந்து PHONE
"டேய் அக்காக்கு ஸீரியஸ்...கோமா(COMA) ல இருக்காங்களாம்...கடவுள வேண்டிக்க டா"
எனக்கு என்ன செய்றது னு தெரியல....எனக்கே கடவுள் அவங்க தான்..நான் எந்த கடவுள் கிட்ட போய் என் அக்காவ காப்பாத்து னு கேக்குறது...இருந்தாலும் ஆண்டவன தானே நம்பனும்...கோவில்...சர்ச்...இப்படி எல்லா இடத்துக்கும் அலைஞ்சேன்
என் அக்காவ காப்பத்து னு கடவுள் கிட்ட கெஞ்சுனேன்....அப்ப கடவுளுக்கு என்ன புடிக்கல போல....நான் கதறுனதும் கேக்கல....என் அக்காவ கூட்டிட்டு பொய்ட்டாரு
எனக்கும் அது தான் கடைசி நாள்.....நானும் செத்துட்டேங்க....இன்னைக்கு ஒரு பிணமா அக்காட பிள்ளைகளுக்காக வாழ்ந்துட்டு இருக்கேன்....கடவுள் நம்பிக்கை ல இல்ல நண்பர்கள் இருக்க நம்பிக்கைல தான்.
இப்ப கூட தூக்கம் வராம நான் அவஸ்தை படுறது அக்கா ஞாபகத்துல தான்.
அதான் என் மனசுல இருந்தது எல்லாத்தையும் கொட்டிட்டேன்.நீளமான இந்த பதிவை என் அக்காவுக்காக வாசிச்ச உங்க எல்லாருக்கும் என் நன்றி.
இப்ப சொல்லுங்க....அம்மாவ விட ஒரு அக்கா அன்பு காட்ட முடியுமா....?
"தாயில் சிறந்த கோயிலுமில்லை
என் தமக்கையில் சிறந்த தாயுமில்லை"